ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் காரணமாக 4 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது.
சத்துப்பள்ளி, பெனுபள்ளி மற்றும் கல்லூர் மண்டலங்களில் கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன.
கல்லூர் மண்டலம், பெருவஞ்சாவில் உள்ள கோழிப் பண்ணைகளை மாவட்ட கால்நடை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் ஆய்வு செய்தனர்.
என்டிஆர் மாவட்டத்தின் திருவூர் மற்றும் கம்பலகுடேம் மண்டலங்களில் பறவைக் காய்ச்சலால் கோழிகள் இறந்துள்ளதாக அறியப்படுகிறது.
பறவைக்காய்ச்சலை அடுத்து, ஆந்திரா-தெலுங்கானா எல்லையில் உள்ள முத்தகுடேமில் பகுதியில் ஒரு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. ஆந்திராவில் இருந்து கோழிகள் மற்றும் முட்டைகள் வருவதைத் தடுக்க சிறப்புக் குழுக்கள் சோதனை நடத்தி வருகின்றன.
வானிலை மாற்றங்களால் பண்ணை கோழிகள் இறந்து வருவதாக கால்நடை பராமரிப்புத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
கோழிக்கறி சாப்பிட விரும்புவோர் அதை நன்றாக சமைக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதனால், கோழி இறைச்சி விலை கடுமையாகக் குறைந்துவிட்டது. ஆந்திராவின் பல பகுதிகளில் கோழிக்கறி கிலோ ரூ.30க்கு விற்கப்பட்டாலும், யாரும் அதை வாங்க முன்வருவதில்லை.