சென்னை,

சென்னை கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து 4 சிறுமிகள் தப்பி ஓடினர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கெல்லீசில் அரசு கூர்நோக்க இல்லம் உள்ளது. இங்கு 18 வயது கீழ் உள்ள குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டு, அவர்களை சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நள்ளிரவு பாதுகாவலர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தை தெரிந்துகொண்ட சிறுமிகள் 4 பேர் கூர்நோக்கு இல்லத்தின் சுவர் ஏறி குதித்து தப்பியோடியுள்ளனர்.

காலையில் விவரம் தெரிந்ததும்  அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் அருகில் உள்ள காவல்நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர்.

தப்பியோடிய சிறுமிகள் அனைவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டவர்கள். பெண் சிறுமிகளே சுவர் ஏறி குதித்து ஓடியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகாரின் பேரில் தப்பியோடிய சிறுமிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலைமாதம் இதே கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டி ருந்த  சிறுவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டு  பலருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.