ம்மு

ம்மு காஷ்மீரில் மீண்டும் 4 ஜி இண்டர்நெட் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் விதி எண் 370 விலக்கப்பட்டு மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.   மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன்  பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.   லடாக் பிரதேசம் மத்திய அமைச்சரவையின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.  தகவல் தொடர்பு, இணையம் உள்ளிட்டவை முழுவதுமாக முடக்கப்பட்டது.  அம்மாநிலத்துக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் திருப்பு அனுப்பப்பட்டனர்.

இணையச் சேவையைத் திரும்ப அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் இணையச் சேவைகளை அளிக்கலாம் எனத் தீர்ப்பளித்த போதிலும் ஒரு சில இடங்களில் மட்டும் மிகவும் குறைந்த வேகத்தில் இணையச் சேவை அளிக்கப்பட்டு வந்தது.  தற்போது ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலர் ரோகித் கன்சல் தற்போது மாநிலம் முழுவதும் மீண்டும் 4 ஜி இணையச் சேவைத் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.