ராய்ப்பூர்
மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பும் போது நடந்த விபத்தில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர்/
கடந்த மாதம் 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
உலகெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திற்கு வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்.
இன்று காலை 6.30 மணியளவில் கும்பமேளாவிற்கு சென்று புனித நீராடிவிட்டு வீடு திரும்பிய பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் தர்நாகர் கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது . இந்த விபத்தில் வாகனத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்தன
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிகிச்சை பலனின்றி லட்சுமி பாய் (30), அனில் பிரதான் (37), தாக்கூர் ராம் யாதவ் (58), மற்றும் ருக்மிணி யாதவ் (56) ஆகியோர் உயிரிழந்தனர். பின்னர் உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.