பிஜாப்பூர்’
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுக்காப்பு படையினரின் துப்ப்பாக்கி சூட்டுக்கு 31 நக்ஸலைட்டுகள் பலியாகி உள்ளனர்
சத்தீஷ்கா மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நேசனல் பார்க் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இவர்களுடன் மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடி படை உள்ளிட்ட வீரர்கள் இணைந்து சென்றபோது, நக்சலைட்டுகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, வீரர்களும் பதிலடியாக அவர்களை நோக்கி சுட்டனர். இரு வீரர்கள் இந்த சண்டையில் மரணம் அடைந்து 2 பேர் காயம் அடைந்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் 31 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
அந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்ப்பட்டுள்ளன.. இந்த சண்டையில் காயமடைந்த 2 வீரர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு. அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நக்சலைட்டுகளை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.