நாடு முழுவதும் சுமார் 4.8 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் 72,062 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 59,45,709 வழக்குகளும், மாவட்ட மற்றும் மஜிஸ்திரேட் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களில் 4,19,79,353 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குகள் நிலுவைக்கும் சட்டத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் விளக்கமளித்துள்ளனர்.