சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக  3,702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. அதாவது சிக்னலின்போது, சாலையில், வாகன நிறுத்தத்த தாண்டி நிற்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து இந்த அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டாப்லைன் கோட்டைத்தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை போலீசார் தொடங்கியுள்ளனர்.

சாலையில் வாகன ஓட்டிகளில் போக்குவரத்து விதிகள் மீறலால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருவதுடன், அபராதங்களும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளன.  அதன்படி, வாகனங்களை வேகமாக இயக்கினால், இலகு ரக வாகனங்களுக்கு 1,000 ரூபாய்; நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு 2,000 ரூபாய் அபராதம். *வாகனங்களை காப்பீடு செய்யாமல் இயக்கினால், முதல் முறை 2,000; இரண்டாவது முறை 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், மோட்டாா் வாகனச் சட்டம் திருத்ததின்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000 அபராதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000, சீட் பெல்ட் அணியாமல் காா் ஓட்டினால் ரூ.1,000, சிக்னலை மீறினால் ரூ.500, சரக்கு வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச் சென்றால் ரூ. 20,000 என அபராதம் உயா்த்தப்பட்டுள்ளது.

அதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கான அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில் போக்குவரத்து போலீஸாா் நேற்று மட்டும் 287 இடங்களில் விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா். சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது நிறுத்தக் கோடுகளை தாண்டி நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதித்தனா். 

அதன்படி சென்னையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 3,702 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு  அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.