ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் மினி பஸ் ஒன்றில் அதிக அளவில் பயணிகள் ஏற்றப்பட்டதால், பாரம் தாங்காமல் சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டது. இதில் 35 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டம் கேஷ்வானில் இருந்து கிஸ்த்வார் நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்த மினி பஸ் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை யோர பள்ளத்தில் பாய்ந்து உருண்டது. இந்த கோர விபத்தில் அதில் பயணம் செய்த பணிகளில் 35 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 20 பேர் மட்டுமே பயணம் செய்யும் மினி பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர்  பயணம் செய்துள் ளதே விபத்து காரணம் என்றும்,  அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பஸ் நிதானம் இழந்து சாலையோர பள்ளத்தில் சாய்ந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.