சென்னை:

மிழ்நாட்டில் 2 கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 35 பொறி யியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அவலம் ஏற்பட்டுள்ளது. இது பொறியியல் படிப்புகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படித்தவர்களுக்கு தேவையான  வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில்,பொறியியல் படிப்பின் மீதான மோகம் குறைந்து வருகிறது.  மாணவர்கள் சேர்க்கையின்றி , ஏராளமான கல்லூரிகள் மூடப்பட்டும், சில கல்லூரிகள் கலைக்கல்லூரிகளாகவும் மாற்றப்பட்டன.

நடப்பு ஆண்டில் 2 கட்ட  பொறியியல் கலந்தாய்வு  முடிவடைந்துள்ள நிலையில், சுமார்  சுமார் 87 சதவிகித இடங்களில் காலியாக இருப்பதாக  உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் தறபோது செயல்பட்டு வரும், 479 பொறியியல் கல்லூரிகளில், 1லட்சத்து 67ஆயிரத்து 101 இடங்கள் உள்ளது. ஆனால், நடப்பு ஆண்டில்,  35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்,  15 கல்லூரிகளில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளதாகவும், 80 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை 21 ஆயிரத்து 532 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதாவது மொத்தமுள்ள இடங்களில் 13 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.