வயல்வெளிகளில் உயர் மின் கோபுரங்கள்: தமிழக விவசாயிகள் டில்லியில் போராட்டம்

Must read

டில்லி:

மிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களின் வயல்வெளி வழியாக உயர்அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் வகையில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதை கண்டித்து,  தமிழக விவசாயிகள் டில்லி ஜந்தர்மந்திரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தலைநகர் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வயல்வெளிகளில் உயர் அழுத்த மின்கோபுரங்கள், மற்றும் எரிவாயுக் குழாய்கள் பதிப்படுவதை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும், சுமார் 70 விவசாயிகள், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்குப் பதில் கேபிளாக அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லவேண்டும் என்றும், கெயில் எரிவாயு, பெட்ரோலியம் போன்றவற்றை சாலையோரம் கொண்டு செல்லவேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.  இது தொடர்பாக பிரதமரை சந்தித்து மனு கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு வைகோ உள்பட  தமிழக  எம்.பி.க்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article