ந்தாரா

ன்று நடைபெற்று வரும் இடைத்தேர்தலை 54 கிராமங்கள் புறக்கணித்துள்ளன.

இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாந்திரா – கோண்டியா சட்டப்பேரவி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.  இந்த பகுதியில் கோசிகுர்த் நீர்ப்பாசன திட்டம் அமைக்கப்பட உள்ளது.  அந்த திட்டத்தினால் சுமார் 34 கிராமங்கள் பாதிக்கப்படும் என அந்த மக்கள் அஞ்சுகின்றனர்.

அதனால் தங்களுக்கு உரிய மாற்று இடம் அமைக்கக் கோரி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   அரசு அவர்களின் கோரிக்கையை இதுவரை கவனிக்கவில்லை.   எனவே அரசின் கவனத்தை ஈர்க்க இந்த 34 கிராமங்களும் தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.

இந்த கிராமங்களில் சுமார் 50000 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.