யுனான்

சீன நாட்டில் நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்தவர்களில் 31 பேர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளன.

சீன நாட்டின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷூய்குன் கிராமம் உள்ளது .

நேற்று முன்தினம் இந்த கிராமத்தில் ஏற்பட்ட  நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை மண்ணில் புதையுண்ட 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.