கொழும்பு

லங்கை அமைச்சர் சனத் நிஷாந்த சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

நேற்று இரவு இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த. காட்டுநாயாகாவில் இருந்து கொழும்பு நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். சனத் நிஷாந்த சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் மோதியது.

இந்த கார் விபத்தில் அமைச்சர் சனத் நிஷாந்த, பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மூவரும் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிய மூவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அமைச்சரின் கார் ஒட்டுநர் தற்போது படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.