லக்னோ,

டைபெற இருக்கும் உ.பி. சட்டமன்ற தேர்தலில் 302 கோடீஸ்வரர்கள் 168 கிரிமினல்கள் போட்டி யிடுகின்றனர்.

உ.பி., சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வரும் 11ம் தேர்தல் நடைபெற உள்ளது.

உத்திரபிரதேசத்தில் நடைபெற இருக்கும்  சட்டசபை தேர்தலில் 302 கோடீஸ்வரர்கள், 168 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள் போட்டியில் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில், வேட்பாளர்கள் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர்.

அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியான சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சியின் கூட்டணி வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மாயாவதி கட்சி தனி அணியாகவும், பா.ஜ.க. தனி அணியாகவும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து,  ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பான தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் கூறியிருப்பதாவது, தேர்தலில் போட்டியிடும் 836 வேட்பாளர்களில் 302 கோடீஸ்வரர்கள் என தெரிய வந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் 73 வேட்பாளர்களில் 66 பேர் கோடீஸ்வரர்கள்,

பா.ஜ., சார்பில் போட்டியிடும் 73 பேரில் 61 பேர் கோடீஸ்வரர்கள்,

சமாஜ்வாதி சார்பில் போட்டியிடும் 51 பேரில் 40 பேர் கோடீஸ்வரர்கள் ,

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 24 பேரில் 18 பேர்கோடீஸ்வரர்கள்,

ராஷ்டிரிய லோக்தள் கட்சி சார்பில் போட்டியிடும் 57 பேரில் 41 பேர் கோடீஸ்வரர்கள்

சுயேட்சையாக போட்டியிடும் 392 பேரில் 43 பேர் கோடீஸ்வரர்கள் .

இவர்களுக்கு குறைந்தது ரூ. 1 கோடிக்கு மேல் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவர்களின் சராசரி சொத்து ரூ.2.81 கோடியாக உள்ளது.

இதேபோல் 836 வேட்பாளர்களில் 168 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இவர்களில் 143 பேர் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளது.

அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வேட்பாளர்களில் 186 பேர் பான் கார்டு பற்றிய விபரங்களை தாக்கல் செய்யவில்லை.