உ.பி. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 30 குழந்தைகள் பலி

கோராக்பூர்:

உபி மாநிலம் கோராக்ப்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் இறந்திருப்பதாக மாவட்ட கலெக்டர் ராஜீவ் ராவ்திலா தெரிவித்துள்ளார்.

ரூ. 69 லட்சம் வரை தொகை நிலுவை வைத்திருந்ததால் மருத்துவமனை ஆக்சிஜன் இல்லாமல் இயங்கி வந்துள்ளது. நேற்று முதல் ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இன்றோடு அனைத்து சிலிண்டர்களும் தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
30 Children Die After Gorakhpur Hospital Runs Out Of Oxygen