டெல்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 10,116 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேற்று ஒரே நாளில்  புதிதாக மேலும் 6,990 பேர் பாதித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,97,822 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சைபலனின்றி மேலும்  190 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால், நாடு முழுவதும் கொரோனாவுக்கு  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,68,980 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.36% ஆக குறைந்துள்ளது.

நேற்று  ஒரே நாளில் 10,116 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,40,18,299 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.35% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,00,543 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.29% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்  இதுவரை 1,23,25,02,767 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 78,80,545 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 10,12,523 சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை 64,13,03,848* சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.