டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும், 18,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சையில் 1,04,555 பேர் உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக மேலும் 18,819 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,52,164 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு 4.16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும்  39 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம்  மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,116 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 13,827 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த  எண்ணிக்கை 4,28,22,493 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.55% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,04,555 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.24% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்  நேற்று ஒரே நாளில் 14,17,217 பேருக்கும், இதுவரை 1,97,61,91,554 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.