சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, 3 நாள் விடுமுறையில் டாஸ்மாக் மது விற்பனை ரூ.850 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலம், கடந்த 3 நாளில் மட்டும் மது விற்பனை ரூ.850 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் தமிழன் குடிகாரனமாக மாறி வருவது மீண்டும் மீண்டும் அதிகரித்து வருவது உறுதியாகி உள்ளது.
பொதுவாக பண்டிகை காலங்களில் மதுவிற்பனை அதிகரிக்கும். ஆனால், சமீப காலமாக சனி, ஞாயிறுவிடுமுறை நாட்களில் அதிகரித்து வருகிறது. மேலும், பள்ளி மாணவர்கள் மூலம் குடுகுடு கிழவன் வரை அனைத்து தரப்பினரும் மது அருந்துவதில் அதிகம் நாட்டம் கொள்கின்றனர். இதை தமிழ்நாடு அரசு சாதகமாக்கி அதிக வகையிலான டாஸ்மாக் மதுக்களை கொண்டு வந்து, மது விற்பனையை அதிகரித்து கல்லா கட்டி வருகிறது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன.14 முதல் 17-ம் தேதி வரை (திருவள்ளுவர் தினம் விடுமுறை) 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, போகிப் பண்டிகையான 14-ம் தேதி ரூ.250 கோடி, பொங்கல் தினத்தன்று ரூ.350 கோடி, காணும் பொங்கலான நேற்று ரூ.250 கோடிக்கும் அதிகமாக விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.