டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89,019 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்ககப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,23,91,129 ஆக உயந்துள்ளது. தற்போதைய நிலையிலி, 6,55,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  நேற்று மட்டும் 713 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஃ1,64,141 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 44,176 பேர் தொற்று பாதிப்பில் இருந்து விடுப்பட்டுள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,15,67,060 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மும்பையில் இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக நேற்று 8,832 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தாராவியில் 73 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். . நடப்பாண்டில் இதுவரை பதிவான அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும். நேற்று பாதிக்கப்பட் டவர்களையும் சேர்ந்து இதுவரை தலைநகரில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் நேற்று புதிதாக 73 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தாராவியில் தொற்று பாதிப்பு 5 ஆயிரத்து 58 ஆக அதிகரித்து உள்ளது. மும்பை புறநகர் பகுதிகளான வசாய்-விரார் மாநகராட்சியில் புதிதாக 358 பேருக்கும், தானே மாநகராட்சியில் 1,370 பேருக்கும், கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியில் 1,108 ஆக பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 92 ஆயிரத்து 780 ஆக அதிகரித்துள்ளது.தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 750ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

புதிதாக பாதிக்கப்பட்டோரைவிட, குணமடைந்தோர் விகிதம் குறைவாகவே உள்ள நிலையில், ஒரே நாளில் ஆயிரத்து 1,715 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.

மேலும் 18 ஆயிரத்து 606 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 188 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..