சென்னை
தமிழகத்தில் இன்று 1,712 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,39,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று தமிழகத்தில் 36,028 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,80,46,652 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 1,712 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தும் இருவர் வெ:ஒ மாநிலத்தில் இருந்தும் வந்துள்ளனர். இதுவரை 35,39,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை. இதுவரை 38,032 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 2,106 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,87,685 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 13,890 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று சென்னையில் 368 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.
இன்று 516 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 4455 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 177 பேர் உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 166 பேர் உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.