சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 33,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக தலைநகர் சென்னையில் 3,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தற்போதைய நிலையில், 3,10,224 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 19,45,260 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழந்தவர்களில் 278 அரசுமருத்துவமனையில் பேர், தனியார் மருத்துவமனையில் 197 பேர். இதனையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21,815 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 29,717 பேர் குணமடைந்துள்ளனர் . இதன்மூலம் மொத்தமாக 16,13,221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .
மாவட்டங்கள் அளவில் சென்னையை தவிர்த்து றிப்பாக கோவை மாவட்டத்தில் சென்னையை விட தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது . சென்னையில் 3,561 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் , கோவையில் 4,268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கோவையில் 35,707 பேர் சிகிச்சையில் உள்ளனர் . 1,103 பேர் உயிரிழந்துள்ளனர் . எனவே , பாதிப்பு தினமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது .
சென்னையில் இன்று கொரோனாவால் 3,561 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,91,197 ஆக அதிகரித்துள்ளது. 98 பேர் உயிழந்துள்ளார்.. இதுவரை 6,644 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 5,223 பேர் தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், இதுவடிர மொத்தம் 4,38,815 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 45,738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.