சென்னை: நடைபெற்று முடிந்த குரூப்4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி நடத்தப்பட்டது கிராம நிர்வாக அலுவலகர், இடைநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக காலியாக உள்ள 7382 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்வை எழுத 2,85,328 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில், 7689 மையங்களில் நடத்தப்பட்ட இந்த சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.

தேர்வு முடிந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தேர்வு முடிவு இன்னும் அறிவிக்கப்படாதது தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால், இதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடாத டிஎன்பிஎஸ்சி தற்போது,  குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்து( உள்ளது. ஏற்கனவே  7,301 பணியிடங்கள் இருந்த நிலையில் தற்போது,  கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 9,870 ஆக உயர்ந்துள்ளது.

குரூப்-4 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கான முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.