சென்னை: சென்னை  கத்திபாரா மேம்பாலம்  அருகே சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து பலர் கடை கட்டி கல்லா கட்டி வந்த நிலையில், அந்த அரசு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டு உள்ளது. அங்கிருந்த 25க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே  சின்னமலை பகுதியில்அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை ஆக்கிரமித்த  பலர் ஆக்கிரமித்து,  கடைகள், குடோன்கள், கிளப் போன்றவற்றை நடத்தி வருகின்றனர். இந்த இடத்தை காலி செய்ய அரசு அறிவுறுத்தியது. ஆனால், அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 2006ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த நிலையில், சுமார்  16 ஆண்டுகள் கழித்து ஆக்ஸ்டு  28ம்தேதி, அரசு நிலத்தை உடனே காலி செய்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு உத்தரவிட்டது. மேலும்,  அரசு நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள், அரசுக்கு ஒட்டுமொத்தமாக 35 கோடி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற அளித்த கால அவகாசம் முடிந்த நிலையில், இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் வந்து அந்த பகுதியில் உள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட கடை மற்றும் குடோன்களில் உள்ள ஆட்கள் மற்றும் பொருட்களை வெளியேற்ற வைத்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந் து மீட்கப்பட்டுள்ள இடத்தின் மொத்த மதிப்பு 150 கோடி ரூபாய் என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.