மும்பை: கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய  25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளர்ர்.

கொரோனா பரவல் அதிகரிப்பினால், நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஜினுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், அதை  பயன்படுத்தி கள்ளச் சந்தையில் ஆக்சிஜன், ரெம்டிசிவரின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்த 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து பட்டியலில் இருந்து நீக்கி உலக சுகாதார நிறுவனம் உத்தரவிட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் இன்னும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை நீடித்து வருகிறது.  இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அடிப்படை தேவையாக இருக்கும் ஆக்சிஜன்-க்கு அதிகளவிலான தேவை உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தியும், விலையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சொந்தமாகப் போர்ட்பல் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வருகின்றனர். இதனால்,  ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சந்தையில் 2.7 கிலோ எடை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் 2 மணிநேரம் 4 நிமிடம் தூய ஆக்சிஜனை பெற முடியும். இதன் விலை சாதாரண நேரத்தில் ரூ.500 முதல் ஆயிரம் வரை மட்டுமே இருந்து வந்தது. தற்போது தேவை அதிகரத்துள்ளதால், ரூ. 5000 என தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இருந்தாலும், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.