அமராவதி:
ந்திராவில் நடிகை ரோஜா உட்பட 25 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சி அமைத்து, அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன.

இந்நிலையில், அமைச்சரவையை மாற்றியமைக்க, ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதில், புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்கவும், அவர் முடிவு செய்துள்ளார். ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு வசதியாக, தற்போது அமைச்சர்களாக உள்ள அனைவரும், ராஜினாமா செய்தனர்.

இவர்களில் 10 பேர் உள்பட 25 அமைச்சர்கள் இன்று காலை 11.31 மணியளவில் முறைப்படி பதவியேற்க உள்ளனர். தமிழக எல்லையை ஒட்டியுள்ள நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லையென அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், புதிய அமைச்சர்கள் பட்டியலில் ரோஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த புதிய அமைச்சரவை பட்டியலில் வாய்ப்பு கிடைக்காத சில எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் இன்று பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.