சென்னை,
ரும் 25-ந்தேதி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் கூட்டப்படுவதாக அனைத்து  கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.
காவிரி பிரச்சினை மற்றும் இலங்கை மீனவர் பிரச்சினை போன்ற தமிழக பொது பிரச்சினைகளில்  அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால், தமிழகஅரசோ, முதல்வர் ஜெயலலிதாவோ இதுவரை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. அனைத்துகட்சி கூட்டம் தேவையற்றது என்று சொல்லி வந்தது.
தற்போது காவிரி பிரச்சினை தீவிரமானதால், மீண்டும் அனைத்து  கட்சி கூட்டம் என்ற கோரிக்கை அரசியல் கட்சி தலைவர்களிடையே வலுத்தது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் தமிழக அரசு செயலிழந்து உள்ளது.
இதன் காரணமாக தமிழக எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின், தாமே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டு வேன் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த காவிரி நீர் மேலாண்மை  வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், முதலில் சம்மதம் சொன்ன மத்திய அரசு, அடுத்த விசாரணையின்போது, கர்நாடக மாநில பா.ஜ.கவினரின் நெருக்கடியால்  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை, பாராளுமன்ற  ஒப்புதல் பெற்றுத்தான் அமைக்க முடியும் என்று பல்டி அடித்து விட்டது.
மத்தியஅரசின் இந்த தமிழக விரோத போக்கு  தமிழக விவசாயி களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரண மாக மத்திய அரசை கண்டித்து இரண்டு நாட்கடள  ரெயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டத்துக்கு  அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டு மொத்தமாக ஆதரவு தெரிவித்து,  மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தன.
தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி தலைவர்களும் பிரதம ரிடம் இது குறித்து நேரில் வலியுறுத்த வேண்டும், இதற்காக அனைத்து கட்சி கூட் டத்தை கூட்ட வேண்டும். மேலும் தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதற்கு அச்சாரமாக,  கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில் ஏற்பாடு செய்தார்.
அதில், அனைத்து கட்சித் தலைவர்கள் விவசாய சங்க பிரதிநிதிகளை டெல்லிக்கு  அழைத்து சென்று பிரதமரை சந்தித்து பேசுவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மான நகல்களை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு ஓபிஎஸ்சிடம்  வலியுறுத்தினார்.
ஆனால், இதுவரை அரசிடம் இருந்து எந்தவித உத்தரவும் வராத நிலையில், தமிழக எதிர்க் கட்சி தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக கூட்டிய அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம்
 திமுக கூட்டிய அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம்

சென்னையில் வருகிற 25-ந்தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும், அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தை கள், ம.தி.மு.க., இந்திய கம்யூ னிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதே போல் அனைத்து விவசாய சங்க அமைப்பு தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பெயருக்கு கடிதம் எழுதி தலைமை கழகத்துக்கு ஆள் மூலம் கடிதம் கொடுத்து அனுப்பப்பட்டது.
ஆனால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமை கழகத் தில் உள்ளவர்கள் வாங்க மறுத்து விட்டனர்.
இதனால் கூரியர் தபால் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
dmk-letter