சென்னை

மிழகத்தில் இன்று 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 31,94,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,48,469 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,09,03,180 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 12 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 4 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 31,94,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 48 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,312 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 25,221 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 29,45,678 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,11,270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 6,241 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,04,899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 21 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,853 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 7,391 பேர் குணம் அடைந்து மொத்தம் 6,44,433 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 51,613 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 3,384 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 1,737 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 2,95,184 பேர் பாதிக்கப்பட்டு 2,548 பேர் உயிர் இழந்து 2,66,458 பேர் குணம் அடைந்து தற்போது 26,178 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,15,787 பேர் பாதிக்கப்பட்டு 2,591 பேர் உயிர் இழந்து 1,96,392 பேர் குணம் அடைந்து தற்போது 16,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.