2டி நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ’24’. பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் 2016-ம் ஆண்டு மே 6-ம் தேதி வெளியானது.

பல்வேறு பழைய படங்கள் தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ’24’ படமும் ஜூலை 16-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஆனால், நேற்று (ஆகஸ்ட் 10) ’24’ படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

’24’ படம் வெளியானதிலிருந்து படத்தின் ஆடியோவில் பிரச்சினை இருந்தது. பலரும் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார்கள் என விளக்கம் தந்துள்ளனர் .