2
 
கடந்த டிசம்பரில்  சென்னை மக்கள் மழை, வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவித்ததை மையமாக வைத்து நடிகர்  விக்ரம் இயக்கிய  ‘தி ஸ்பிரிட் ஆப் சென்னை’ ஆல்பம் நாளை வெளியாகிறது.
ஒற்றுமையை வலியுறுத்தி விக்ரம் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தை விக்ரமே தயாரித்திருக்கிறார்.  இசை: கிரிநாத். ஒளிப்பதிவு:  மில்டன்.
இதில் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, பிரபுதேவா, சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, அமலாபால், நயன்தாரா, குஷ்பூ ஆகியோருடன், அபிஷேக் பச்சன், நிவின் பாலி, பிருத்விராஜ் உள்ளிட்ட பிற மொழி  நடிகர்களும்  பங்கெடுத்திருக்கிறார்கள்.
எஸ்.பி.பி, ஹரிஹரன் என 29 பாடகர்கள் ஒன்றிணைந்து பாடியுள்ளனர்.இதனால் இந்த ஆல்பத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
 
3
விக்ரம்  “உலகம் இதுவரை கண்டிராத பெரு வெள்ளம் சென்னையை சூழ்ந்த அந்த நாட்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிர் வாழ அத்தியாவசிய தேவையான உணவு,  தண்ணீர் கூட  கிடைக்காமல் தனிமைப் படுத்தப்பட்டது சென்னை. சில இடங்களில் உயிர் பலியும் ஏற்பட்டது.
ஆனால், இந்தப் பெரு வெள்ளம் தேங்கிக் கிடந்ததைப் போல,மக்கள் தேங்கவில்லை. மனிதநேயம் உள்ள அனைவரும் வெளியே வந்தார்கள். அவர்களால் முடிந்தவரை  அனைவருக்கும்
4
உதவினார்கள்.  வெள்ளத்தினைத் தாண்டி, உலகில் இருக்கும் அத்தனை பேரின் கவனத்தினை இந்த உதவி,  ஈர்த்தது. வெள்ளத்திற்கு எதிராக இறங்கி, என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்று வந்தவர்கள் அவர்கள். சென்னை மக்களுக்கிடையே இருந்த அந்த ஒற்றுமை என்னையும் அவர்களோடு ஏதோ ஒரு வழியில் இணைத்துக் கொள்ளத் தூண்டியது. அதன் வெளிப்பாடுதான் இந்த ஆல்பம்”  என்றார்.
ஆல்பம் வெளியாவதை ஒட்டி #chiyaanvikram, #SpiritOfChennai, #vikram போன்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி அதனை இந்தியளவில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.