டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3,659 பேரும் கேரளாவில் 2,609 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி அளவிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கொரோனா பாதிப்பு  நேற்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் இன்று 12ஆயிரத்தை கடந்து  அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 31 ஆயிரத்து 645 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3,659 பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 2,354 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 57 சதவீதம் உயர்ந்துள்ளது.  டெல்லியில் புதிய பாதிப்பு 1,060-ல் இருந்து 1,383 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 2,609 பேர் பாதிப்பு உள்ளாகி இருக்கிறார்கள்.  கர்நாடகாவில் 738, தமிழ்நாட்டில் 737, அரியானாவில் 611, உத்தரபிரதேசத்தில் 487, மேற்கு வங்கத்தில் 406, தெலுங்கானாவில் 403, குஜராத்தில் 226, கோவாவில் 135, பஞ்சாபில் 105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில்,  9,862 பேர் நலம் பெற்று விடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 27 லட்சத்து 25 ஆயிரத்து 55 பேர் குணம் அடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.60 சதவீதமாக உள்ளது

தற்போது 81,687 பேர் கொரோனா தொற்று காரணமாக  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 2,374 அதிகம் ஆகும். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.19 சதவீதமாக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் 8 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர நேற்று மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், டெல்லியில் தலா ஒருவர் என  மொத்தம் 13 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,903 ஆக உயர்ந்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 196 கோடியே 45 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 12,28,291 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 3,10,623 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.88 கோடியாக உயர்ந்துள்ளது என  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.