சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18,06,861 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் இதுவரை 47,36,71 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று புதியதாக 35,873 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5559 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,06,861 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், 448 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 169  தனியார் மருத்துவமனையில் பேரும், அரசு மருத்துவமனையில் 279 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 20,046 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இன்று மட்டும் 25,776 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15,02,537 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,75,23 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்று 5559 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருப்பதுடன் 86 பேர் உயிரிழந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மொத்த உயிரிழப்பு 6298 ஆக அதிகரித்துள்ளது.  இன்று 4,871 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  இதுவரை 41,81,37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போதைய நிலையில், 49,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 275
செங்கல்பட்டு 1,954
சென்னை 5,559
கோவை 3,165
கடலூர் 801
தர்மபுரி 360
திண்டுக்கல் 452
ஈரோடு 1,758
கல்லக்குறிச்சி .266
காஞ்சீபுரம் 1,017
கன்னியாகுமரி 1,621
கருர் 315
கிருஷ்ணகிரி 781
மதுரை 1,352
நாகப்பட்டினம் 651
நாமக்கல் 598
நீலகிரி 387
ராமநாதபுரம் 364
ராணிப்பேட்டை 497
சேலம் 742
சிவகங்கை .168
தென்காசி 553
தஞ்சாவூர் 884
தேனி 701
திருப்பத்தூர் 494
திருவள்ளூர் 1,511
திருவண்ணாமலை 757
திருவாரூர் 569
தூத்துக்குடி 893
திருநெல்வேலி 589
திருப்பூர் 1,466
திருச்சி 1,351
வேலூர் 588
விழுப்புரம் 522
விருதுநகர் 1,287