டெல்லியில் 2,087 பேர் பாதிப்பு: குடியரசுத்தலைவர் மாளிகைக்குள் புகுந்தது கொரோனா…

Must read

டெல்லி:

நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மாளிகைக்குள் புகுந்துள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு வசிக்கும் 125 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்தியசுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால், இன்று காலை நிலவரப்படி,  டெல்லியில்  2,087 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற கூறினார்.

டெல்லி மாநில அரசின்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பேசுகையில், நேற்று ஒரே நாளில் 78 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  1397 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 78 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து நோயாளிகளும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களில் 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 5 பேர் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். கேவிட் கிட்  பரிசோதனை கருவி மூலம் சுமார் 74 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் அனைவருக்குமே தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, 125 குடும்பங்கள் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த நபர் (தூய்மை பணியாளர்)  என்றும், அவர் வசித்த பகுதியில் உள்ள 125 குடும்பத்தினரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்புரவு பணியாளரின் மருமகளின் தாயார், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இறுதிச் சடங்குகளில் குடும்பத்தினர் கலந்து கொண்டு திரும்பி இருக்கிறார்கள். இதனையடுத்து தூய்மைப் பணியாளரின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்ட சிறப்பு வார்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர் வசித்த வீடருகே இருந்த 30 குடும்பத்தினரும் இப்போது தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவை அரசு வழங்கி வந்தது.

கொரோனா பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

More articles

Latest article