ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடுவதில் 2024 ம் ஆண்டு தனது கடைசி ஆண்டாக இருக்கும் என்று வார்னர் தெரிவித்துள்ளார்.

2024 ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தனது கடைசி தொடராக இருக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

அந்த தொடரில் விளையாட தேர்வு செய்யப்படும் பட்சத்தில் உலகக்கோப்பையை வெல்வதே எனது லட்சியமாக இருக்கும்.

உலகக்கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெறுவதை எதிர்பார்க்கிறேன் என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்காக விளையாடிய வார்னர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.