ஒடிசா: ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகளை விளையாட்டு ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில், கிழக்கு கடற்கரை ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில்  நடைபெறுகிறது.  ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவலையடுத்து உலக கோப்பை போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

இநத் நிலையில்,  ஆடவர் உலக கோப்பை ஹாக்கி தொடர் 2023 லீக் சுற்று போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா நகரங்களில் ஜனவரி 13ந்தேதி முதல் 29ந்தேதி வரை நடைபெறுகிறது. . மொத்தம் 44 போட்டிகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்திலும், ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டே ஹோக்லி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து,  இந்திய ரயில்வே துறை, ஒடிசாவில் நடக்கும் ஹாக்கி 2023 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, பிரத்யேகமாக இரண்டு புதிய “ஹாக்கி சிறப்பு” ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  , ஜனவரி 13 முதல் ஜனவரி 29 வரை நடைபெற உள்ள ஹாக்கி ஆடவர் உலகக் கோப்பையின் போது பயணிகளின் கூடுதல் நெரிசலைத் தடுக்க கிழக்கு கடற்கரை ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளதாக  செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, இரண்டு ரயில்களுக்கான வழித்தடங்களாக, முதல் ரயில் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா இடையே இயக்கப்படும் என்றும், இரண்டாவது ரயில் பூரி மற்றும் ரூர்கேலா இடையே இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பயணிகளின் வசதிக்காக, இந்த ரயிலில் ஒரு ஏசி-2 அடுக்கு, மூன்று ஏசி-3 அடுக்கு, எட்டு ஸ்லீப்பர் வகுப்பு, நான்கு இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் இரண்டு காவலர் மற்றும் லக்கேஜ் வேன்கள், கட்டாக், தேன்கனல், தல்சேர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். சாலை, அங்குல், ரைராகோல், சம்பல்பூர் நகரம், ஜார்சுகுடா மற்றும் ராஜகங்பூர் ஆகிய இரண்டு திசைகளிலிருந்தும் புவனேஸ்வர்-ரூர்கேலா இடையே இயக்கப்படுகிறது,.

புவனேஸ்வர்-ரூர்கேலா சிறப்பு ரயில் ஜனவரி 14 முதல் 30 வரை ஒவ்வொரு திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து புறப்படும் என்று கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது.

திரும்பும் திசையில், ஜனவரி 15 முதல் 31 வரை ஒவ்வொரு செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.25 மணிக்கு ரூர்கேலாவிலிருந்து ரயில் புறப்படும். இந்த ரயில்கள் ஜனவரி 31ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.