டெல்லி:  2023ம் ஆண்டு ஜனவரி 26ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வாகியுள்ளது. கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் குடியரசு நாளான ஜனவரி 26ந்தேதி  டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம் பெறும்.

குடியரசு தின விழா அணி வகுப்பில் 75 ஆண்டு சாதனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் பங்கேற்க உள்ள  அலங்கார ஊர்தி மாதிரிகளை  செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.  அதன்படி தமிழ்நாடு உள்பட மாநிலங்கள் தரப்பில்,  அணிவகுப்பில் இடம்பெறப் போகும் அலங்கார ஊர்திகளின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில்,  மகளிர் சாதனையாளர்கள் மற்றும்  இந்தியா-75, உள்பட 3 கருத்துக்கள் அடங்கிய தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது.  இதில்,  அணிவகுப்பு ஊர்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல, ஆந்திர பிரதேசம், அருணாச்சலபிரதேசம், அசாம், குஜராத், அரியானா, ஜார்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம் மற்றும் யூனியன் பிரதேசங்களான டாடா நகர் ஹவேலி-டாமன், டையூ, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்களின் ஊர்திகள் தேர்வாகியுள்ளன.