2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று (அக்.,2) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் பற்றிய ஆய்வுக்காக ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் அவரது நினைவு நாளான டிசம்பர் 10 ம் தேதி நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இதில் உலகளவில் அனைவரும் அறிந்த அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் அறிவிக்கப்படும்.

2023ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு… கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளர்கள் 2 பேருக்கு வழங்கப்பட்டது…