2019 உலககோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி மிரட்டும்: அணில்கும்ளே

Must read

டில்லி:

லக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கோப்பையை வெல்லப்போவது யார் என்று உலக நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அணில் கும்ளே

இந்த நிலையில், உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி இந்தமுறை மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அணில்கும்ளே தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி தலைமை யிலான இந்திய அணி பங்கேற்க உள்ளது.  அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சம விகிதாச்சாரத்தில் இடம் பிடித்துள்ளனர். இந்த வகையில் மற்ற அணிகளை விட இந்திய அணி அதிக அனுபவம் கொண்டக உள்ளது. 4 வேகப்பந்து வீச்சாளர்களும், 3 சுழற்பந்து வீச்சாளர்களும், விராட்கோலி, டோனி ஆகியோரும் அணி யில் அங்கம் வகிக்கிறார்கள்.

இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்போகும்  போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

(பைல் படம்)

கடந்த  1983-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனான கபில்தேவ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இந்திய அணி கண்டிப்பாக அரை இறுதிக்கு செல்லும் எனறு நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அதுபோல  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே அளித்த பேட்டி ஒன்றில், இந்த தடவை ஆப்கானிஸ்தான் அணி சில அணிகளுக்கு நிச்சயம் அச்சுறுத்தலை அளிக்கும் வகையில் ஆட்டம் இருக்கும் என்றவர், ஏறிகனவே. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் செமையாக ஆடி 2வது இடத்தை பிடித்திருந்ததை நினைவு கூர்ந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை சமன் (டை) செய்தது அதுபோல,   பாகிஸ்தான், வங்காளதேச அணிகளையும் துரத்தியடித்தது. அணியில் உள்ள  சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஹீரோவாக திகழ்கிறார். முகமது நபி அற்புதமான ஆல்-ரவுண்டர். முஜீப் ரகுமானும் சிறப்பாக சுழற்பந்து வீசக்கூடியவர் என்றுகூறிய கும்ப்ளே, ஆட்டத்தின்போது, பேட்டிங்கில் ஆப்கானிஸ்தான் அணி 250க்கு மேல் ரன்கள் எடுத்து விட்டால், அது எதிரணிக்கு கடும் சவாலாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article