டில்லி

னது ஊர் தோழியுடன் ஓரின சேர்க்கை உள்ளதாக இந்திய தளகட வீராங்கனை டூட்டி சந்த் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரிசாவை சேர்ந்த இந்தியாவின் தளகட வீராங்கனையான டூட்டி சந்த் 2018 ஆம் வருட ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளார். இந்த இரு போட்டிகளிலும் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவர் 100 மீட்டர் தூரத்தை 11.24 நொடிகளில் கடந்து தேசிய சாதனை புரிந்தவர் ஆவார். .

தற்போது 23 வயதாகும் இவர் தனது ஊர் தோழியும் தூரத்து உறவினருமான 19 வயது கல்லூரி மாணவியுடன் தமக்கு ஓரின சேர்க்கை உள்ளதாகவும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இவர் மூத்த சகோதரி உள்ளிட்ட இவர் குடும்பத்தினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண் டூட்டி சந்த் இடம் உள்ள செல்வத்துக்காக பழகுவதாக மூத்த சகோதரி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் அதை டூட்டி மறுத்துள்ளார். அத்துடன் ஏற்கனவே மற்றொரு வீராங்கனையான பிங்கி பிரமனிக் மீது இது போன்ற விருப்பத்துகாக பலாத்கார குற்றம் சாட்டப்பட்டதாகவும் தமக்கு அந்த நிலை வரக்கூடாது என்பதால் வெளிப்படையாக தனது முடிவு குறித்து தெரிவித்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

அத்துடன் டூட்டி சந்த் தமது விருப்பத்தை வெளியே சொல்ல மிக நாட்களாக விரும்பி இருந்ததாகவும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஓரின சேர்ககை சட்ட விரோதம் அல்ல என தீர்ப்பு அளித்ததால் தமக்கு இதை வெளியில் சொல்ல தைரியம் வந்ததாகவும் கூறி உள்ளார்.

டூட்டி ஏற்கனவே அவர் உடலில் ஆண்களுக்கான மரபணு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டு தடை விதிக்கபப்ட்டு அதன் பிறகு அந்த தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.