சென்னை

மிழகத்தில் இன்று 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 28,91,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,53,046 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,92,64,199 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து இருவர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 19 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 28,91,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 26 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,956 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 9,026 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,36,986 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,18,017 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 8,963 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 6,25,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 10 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,715 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 4,557 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,66,296 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 50,977 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 2,504 உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 1,864 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 2,61,149 பேர் பாதிக்கப்பட்டு 2,528 பேர் உயிர் இழந்து 2,52,293 பேர் குணம் அடைந்து தற்போது 3,328 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,91,484 பேர் பாதிக்கப்பட்டு 2,559 பேர் உயிர் இழந்து 1,75,575 பேர் குணம் அடைந்து தற்போது 13,180 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் செங்கல்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.