20/01/2022: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் சிகிச்சை பெறுவோர் 62,007 பேர்

Must read

சென்னை:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மேலும் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  தொற்றில் இருந்து 19,978 பேர் குணமடைந்துள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 62,007 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 28,561 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16,234 பேர் ஆண்கள், 12,327 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 39 பேர் உயிரிழந்துள்ளார். 19 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 20 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 19,978 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 26 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதுழம்  1லட்சத்து 79 ஆயிரத்து 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது 326 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று ஒரேநாளில், சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 1,54,912 இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 6,01,35,832.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

அதிகபட்சமாக சென்னையில் இன்று 7520 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 6,76,147 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 8011 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,05,366 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  இதுவரை 8774 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 62,007 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர்145
செங்கல்பட்டு2196
சென்னை7520
கோவை 3390
கடலூர்505
தர்மபுரி289
திண்டுக்கல்147
ஈரோடு919
கள்ளக்குறிச்சி186
காஞ்சிபுரம்738
கன்னியாகுமரி1148
கரூர்194
கிருஷ்ணகிரி684
மதுரை718
மயிலாடுதுறை151
நாகப்பட்டினம்163
நாமக்கல்527
நீலகிரி242
பெரம்பலூர்123
புதுக்கோட்டை177
ராமநாதபுரம்235
ராணிப்பேட்டை189
சேலம்937
சிவகங்கை 138
தென்காசி 221
தஞ்சாவூர் 544
தேனி323
திருப்பத்தூர்299
திருவள்ளூர்998
திருவண்ணாமலை518
திருவாரூர்247
தூத்துக்குடி 323
திருநெல்வேலி 756
திருப்பூர் 897
திருச்சி639
வேலூர் 262
விழுப்புரம் 322
விருதுநகர்550

 

More articles

Latest article