சேலம்:
“5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம் என்றும் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எனது வெளிநாட்டு பயணத்தால் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வர உள்ளன என்றும், தமிழ்நாட்டை பாழ்படுத்தும் கூட்டம் எனது வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து வருகிறது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் திட்டங்களுக்கே நேரம் சரியாக இருப்பதால் யாருக்கும் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel