உரி:
காஷ்மீரின் எல்லை பகுதியான உரியில் இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதியான உரி ராணுவ முகாமை அதிகாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற இந்திய வீரர்கள் தாக்குதலில் முகாமை தாக்கிய 4 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
soldeirs
காஷ்மீரில்  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து காஷ்மிரில் வன்முறை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 2 மாதமாக காஷ்மீரில் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது.  இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளது..
இந்திய உரி ராணுவ முகாமை பயங்கரவாதிகள் கொண்டு நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் உறவு மேலும் விரிசல் அடைந்து, போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உரி தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள்  நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து மேலும் சில தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என ராணுவத்தினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது சந்தேகத்திற்கிடமாக  ஏற்கனவே தாக்குதல் நடந்த உரி பகுதியில் உள்ள எல்லை அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த 2 பேரை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
விசாரணையில்,  அவர்கள் இருவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத வழிகாட்டிகளாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
உரி தாக்குதலைத் தொடர்ந்து முதல் முறையாக பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ள நிலையில், தீவிரவாதிகள் கைது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.