கன்னியாகுமரி:

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கன்னியாகுமரி தொகுதியில்  வெற்றிபெறுவேன் என்று அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்  பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும்  பாரதீய ஜனதா வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த பொன்னார்,  கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளதாக கூறியவர்,.  கடந்த 5 ஆண்டுகளாக யாரும் செய்யாத பல திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செய்து இருக்கிறது.. எங்களின் சாதனைகளை கூறி  மக்களிடம் வாக்கு கேட்போம் என்றார்…

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முதல் நபராக நாங்கள்தான்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம் என்று பெருமையாக கூறியவர், சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்றும்,  மக்களுக்கு வேலைக்காரனாக உள்ள என்னிடம் மக்கள் அதிகம் எதிர் பார்க்கிறார்கள். அதை நிச்சயம் நான் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.