விருதுநகர்

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முந்தைய அதிமுக அரசில் பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வே;லை வாங்கித் தருவதாகப் பலரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.   இந்த புகாரின் அடிப்படையில் தாம் கைச்து செய்யப்படலாம் என எண்ணிய ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி அளித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.

கைதுக்குப் பயந்த ராஜேந்திர பாலாஜி கடந்த டிசம்பர் 17 முதல் தலைமறைவானார்.  அவரை பிடிக்க காவல்துறை 3 தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தது.   தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி தரப்பில் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.   ஆனால் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.   அந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என மற்றொரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இன்று அவர் கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் நடுரோட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் காவல்துறை வாகனத்தைப் பார்த்ததும் தப்ப முயன்றும் கைது செய்யப்பட்டுள்ளார்.  ராஜேந்திர பாலாஜியுடன் 4 அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுமார் 20 நாட்கள்  கழித்து பிடிபட்ட ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையில் ராஜேந்திர பாலாஜி அதிமுகவைச் சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்கள் தனக்கு உதவி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.   இவ்வாறு மேலும் அதிமுக அமைச்சர்கள் இருவரை இவர் மாட்டி விடுவது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.  இன்று இரவு அவரை விருதுநகர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.