மதுரை

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் ஒரு பெட்டியில் தீ பிடித்து இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ, மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளிலும் பரவியது.

சம்பவ இடத்திற்கு விரைவாக வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருவர் இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரும் சமையலர்களாக பணியாற்றி வந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.