டெல்லி:

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு உள்ள தற்போதைய நிலைமை மற்றும் மக்களின்  அன்றாட வாழ்க்கை குறித்த ஆய்வு செய்யும் வகையில் வெளிநாடுகளைச் சேர்ந்த 17 நாடுகளின் தூதர் குழுவினர் இன்று காஷ்மீர் பயணம் மேற்கொள்கின்றனர்.

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ  ரத்து செய்தது. அதையடுத்து,, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில்  அமெரிக்கா மற்றும், நார்வே, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் தலா நான்கு நாடுகள் மற்றும் பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட  2 நாள் பயணமாக  இன்று ஜம்மு-காஷ்மீர்  செல்கின்றனர்.  இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் செல்லும் இந்தக்குழுவினர், நாளை ஜம்மு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் இந்த குழுவினருடன் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், பல நாட்டு தூதர்கள் இன்னும் குளிர்கால விடுமுறையில் உள்ளதால், அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், சிலர் யு.எஸ்- ஈரான் பதட்டங்களின் காரணமாக பங்குகொள்ள முடியவில்லை என்றும் இந்திய அதிகாரிகள்  தரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில், வெளிநாட்டு தூதர்கள் குழுவினர் ஜம்மு காஷ்மீர் செல்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்ததால், சில ஐரோப்பிய ஒன்றிய தூதரர்கள் வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர்கள்,  ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் டாக்டர் பாரூக் அப்துல்லாவை சந்திக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர், ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி  உள்பட 5 பேர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளதால், அவர்களை சந்திப்பது குறித்த நிபந்தனையை ஏற்க மறுத்ததால், சிலர் இந்த குழுவில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய திட்டமிடல் அதிகாரிகள்,  “இந்த நேரத்தில், இதுபோன்ற நிபந்தனைகளை  நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது,” என்றும்,  இதுவரை இந்திய அரசியல்வாதிகளுக்கான பயணத்தை அரசாங்கம் தடை செய்துள்ளதால், இந்த விஜயம் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் விமர்சிக்கப்படுகிறது என்று கூறினர்.

வெளிநாட்டு குழுவினர் ஜம்மு காஷ்மீர் செல்வதற்கான அட்டவணைப்படி,  தூதுக்குழு முதலில் ஸ்ரீநகர்  செல்லகிறது, பின்னர் ஜம்மு செல்லும். இபதாமிபாக் கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ  தலைமையகத்தில் தூதுக்குழுவிற்கு விளக்கம் அளிக்கப்படும் என்றும் அப்போது ஊடகவியலாளர்களும் உடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி ஆலோசகர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள், சிவில் சமூக குழுக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரின் தனி குழுக்கள் ஹோட்டலில் உள்ள தூதர்களை சந்திக்க வாய்ப்புள்ளது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்முவில், பிரதிநிதிகளுக்கு சில சுற்றுலா இடங்களையும் காண்பிக்க வாய்ப்புள்ளது, மேலும் யூனியன் பிரதேசத்தின் லெப்டினன்ட்-கவர்னர் கிரிஷ் சந்திர முர்மு  அவரிகளை சந்தித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு குழுவினர் விஜயம் குறித்து, பள்ளத்தாக்கின் வர்த்தக அமைப்புகளின் தலைவரான காஷ்மீர் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் (கே.சி.சி.ஐ) ஷேக் ஆஷிக் இந்த விஜயம் குறித்து தனக்குத் தெரியாது என்றும், முதல் சுற்று தூதர்களைச் சந்திக்க அழைக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

வெளிநாட்டு குழுவினரின் சந்திப்பு குறித்து கூறிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கவுரவ் கோகோய்,   “இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் ஸ்ரீநகருக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் பேசுவதற்கும் அவர்களுக்கு உறுதியளிப்பதற்கும் முதல் உரிமை இருக்க வேண்டும்” என்றும், இந்த வெளிநாட்டு குழுவினர் சுற்றுப்பயணம் காரணமாக,  பள்ளத்தாக்கில் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வரும்  கட்டுப்பாடுகளை “வெண்மையாக்கும் முயற்சி” என்றும் கூறினார்