வாரணாசி

ரு வருட காலமாக தங்கள் ஒரு பெண்ணின் சடலத்தை அவரது இரு மகள்களும் வீட்டிலேயே வைத்துள்ளனர்.

            மகள்களுடன் உஷா திரிபாதி – பழைய படம்

உஷா திரிபாதி என்னும் 52 வயது பெண்மணி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மதர்வா பகுதியை சேர்ந்தவர் ஆவார்,. இவருக்கு 27 வயதில் பல்லவி திரிபாதி மற்றும் 18 வயதில் வைஷ்விக் திரிபாதி என்று இரு மகள்கள் உள்ளனர்.  மூவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த உஷா உயிரிழந்தார். சுமார்2 ஆண்டுகளுக்கு முன்பே உஷாவின் கணவர் அவர்களைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர் தனது மனைவி இறந்த பின்பும் மகள்களைப் பார்ப்பதற்காக  வீட்டிற்கு வரவில்லை.

தாய் இறந்த சோகத்தில் இருந்து வெளிவராத இரு மகள்களும் தாயின் உடலுக்கு இறுதியாகச் செய்யும் எந்த ஒரு சடங்கையும் செய்யாமல், உடலை வீட்டின் ஒரு அறையில் வைத்திருந்தனர்.  சில தினங்களாக இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால், கதவு மூடியே இருந்தது.

எனவே அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கதவைத் தட்டினர். கதவுகள் திறக்கப்படாததால், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் காவல்துறையினர் வந்து வீட்டின் கதவைத்  தட்டியும் திறக்கவில்லை.

ஆகவே காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது வீட்டுக்குள் ஒரு அறையில் உஷாவின் சடலம் கிடந்தது. அவரது இரண்டு மகள்களும் வேறு ஒரு அறையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.