சென்னை: திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தானது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்து.

திமுக தொகுதிப்பங்கீடு குழுவான  டி.ஆர்.பாலு தலைமையிலான  குழுவினர் உடன்  இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்  மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான   கட்சி நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.    அப்போது இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும், எந்த தொகுதியில் போட்டியிடப்படும் என்பது அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தை முடிவெடுக்கப்படும் என்று இரு  தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே திமுக கூட்டணியில்,  கொமதேக மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரையிலும், இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூர், நாகையிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.