“ஒரு கிலோ நகையை போலீசார் ஆட்டைய போட்டுட்டாங்க!” லலிதாஜுவல்லரி கொள்ளையன் பரபரப்பு தகவல்

Must read

திருச்சி:

மிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், தங்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளில் சுமார் 1கிலோ நகைகளை திருச்சி போலீசார் ஆட்டையை போட்டுவிட்டனர், அதை கணக்கில் காட்டவில்லை என்று லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லலிதா ஜுவல்லரி கொள்ளையில், ரூ,.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டதாகவும், 100 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பலதரப்பட்ட தகவல்கள் பரவி வந்தன. இந்த கொள்ளை தொடர்பாக காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் உள்பட அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில் ஒருவரான சுரேஷ் என்பவர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, காவல்துறையினர் ‘தன் மீது பொய் வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளதாகவும், தனக்கு யாருமே கிடையாது என்று கூறினார். மேலும், தனது நிலை குறித்து குறித்து நீதிபதியிடம் கூற முடியவில்லை, அதற்கு போலீசார் என்னை அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தவர், தன்னிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காவல்துறையினரிடம் கொடுத்து விட்டேன் என்றவர், ஆனாலும், காவல் துறையினர் தொடர்ந்து, தொந்தரவு செய்வதாகவும்; பொய் வழக்குகளைப் பதிவு  செய்து எங்களை அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், செய்து அதிகமாக நகைகளைக் கணக்கு காட்டுவதாகவும்; லலிதா ஜூவலல்லரியில் கொள்ளையடித்த நகைகளின் விபரம் சரியாக தெரியவில்லை’ என்வர்,  ‘திருவாரூரில் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க, அப்போது, நான்  நகை இருந்த பையை போட்டு விட்டு ஓடிய போது,  அந்த பையில் 5,700 கிராம் நகை இருந்ததாக வும்; ஆனால் 4. 800 கிராம் நகையை தான் காவல் துறையினர் கணக்கு காட்டி உள்ளனர்,  இடைப்பட்ட சுமார் 1 கிலோ கிராம் நகை கணக்கில் வரவில்லை என்று காவல்துறையினர் மீது குற்றம் சாட்டியவர்,  நான் இதை கூறினால் போலீசார் தன்னை அடித்து துன்புறுத்துகின்றனர் என்று பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.

கொள்ளையன் செய்தியாளர்களிடம் பேசியதை கண்ட காவல்துறையினர், அங்கிருந்து உடனே அவனை அழைத்துச் சென்றனர்.

கொள்ளையன் சுரேஷ் கூறிய குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article