19வது நாளாக தொடரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு… டெல்லியில் 2வது நாளாக பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்…

Must read

சென்னை:

பெட்ரோல் விலை கொரோனாவை போல நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.  தொடர்ந்து  19வது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது.  டெல்லியில் இன்று 2வது நாளாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை உயர்ந்துள்ளது. இது  வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை இன்று 19வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 பைசா உயர்ந்து  ரூ.83.18 பைசா ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 12 பைசா உயர்ந்து  ரூ.77.29 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் கடந்த 19  நாட்களாக  தொடர்ந்து, விலை உயர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில்  இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.27, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.29 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79,92 பைசா ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.02 பைசா ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லியில், நேற்று முதல் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது.

கொல்கத்தாவில்,  இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.61 பைசா ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.18  பைசா ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மும்பையில்,  இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.70 பைசா ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.34  பைசா ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் போல, பெட்ரோல் டீசல் விலை உயர்வும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

More articles

1 COMMENT

Comments are closed.

Latest article